பழநி விநாயகர்களுக்கு வருடாபிஷேகம்
ADDED :2451 days ago
பழநி:பழநி முருகன்கோயில் கிரிவீதி மற்றும் சரவணப்பொய்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகபூஜை வழிபாடுகள் நடந்தது.
பழநி முருகன்கோயிலை் சேர்ந்த சரவணப்பொய்கை விநாயகர் கோயில், வடக்கு கிரிவீதி தலைவலி தீர்க்கும் வலம்புரி விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகருக்கு பால், பன்னீர், தயிர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. யாகபூஜை செய்து, தீபாராதனை நடந்தது. தெற்கு கிரிவீதி ரோப்கார் விநாயகர், மேற்கு கிரிவீதி நின்ற விநாயகர்கோயில், ராக்காலமடம் விநாயகர் ஆகிய கோயில்களில் வருடாபிஷேக யாகபூஜையுடன் விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.