உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம் : கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முளைப்பாலிகை பதியம் விடும் நிகழ்ச்சி நேற்று (ஏப்., 7ல்) நடந்தது.திருப்பூர், காலேஜ் ரோட்டில் புகழ்பெற்ற கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி காலை 9:15 மேல் 10:15 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, 19ம் தேதி மாலை, 4:00 மணிக்கு அணைப்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடக்கிறது. இதற்காக, அணைப் பாளையம் மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று (ஏப்., 8ல்) காலை முளைப்பாலிகை பதியம் விடும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணை தலைவர் ராஜாமணி, பொருளாளர் அடுல் துரை மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !