இந்தா பிடி என் மனசை!
ADDED :2581 days ago
கருடவாகனத்தில் பவனி வந்தார் பெருமாள். பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, துளசி, பழம், கல்கண்டு சமர்ப்பித்து வணங்கினர். ஒருவர் மட்டும் பூஜைக்காக எதுவும் வாங்கி வைக்கவில்லை. ‘‘பெருமாளே! எல்லாரும் உனக்கு பூ, பழம் என தந்தார்கள். இவையெல்லாம் உன்னிடம் இல்லையா என்ன! உன்னிடம் இல்லாததைக் கொடுத்தால் தானே பெருமை! அதை நான் தருகிறேன்,” என்றார். பகவான் ஒரு கணம் அசந்து அவரைப் பார்த்தார். “பகவானே! துவாபரயுகத்தில் உன் மனதை கோபியர்களிடம் பறி கொடுத்துவிட்டாய். உன்னிடம் இல்லாத மனதை நான் கொடுக்கிறேன், ஏற்றுக் கொள்,” என்றார் அவர். அவர் தான் சுவாமி தேசிகன். தான் பாடிய யதிராஜ ஸப்ததியில் இப்படி குறிப்பிடுகிறார்.