உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாண்பார்ந்த திருப்பெயர்!

மாண்பார்ந்த திருப்பெயர்!

அல்லாஹ்வுக்கு மூவாயிரம் திருப்பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் ஓராயிரம் திருப்பெயர்களை வானவர்களுக்கும், மற்றும் ஓராயிரம் திருப்பெயர்களை நபிமார்களுக்கும் கற்றுக்கொடுத்தான். மீதியுள்ள ஆயிரம் திருப்பெயர்களில் முந்நுõறு திருப்பெயர்களை ‘தௌராத்’ வேதத்திலும், முந்நுõறு திருப்பெயர்களை ‘ஸபூர்’ வேதத்திலும், முந்நுõறு திருப்பெயர்களை ‘இன்ஜீல்’ வேதத்திலும் அவன் வைத்தான். 99 திருப்பெயர்களை ‘குர்ஆனில்’ வைத்தான்.

இதைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, “அல்லாஹ்வுக்கு தொண்ணுõற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை எவர் சூழ்ந்தறிந்துள்ளாரோ அவர் சுவனம் புகுவார்,” என்று கூறியுள்ளார்கள். ‘சூழ்ந்தறிதல்’ என்ற சொல்லுக்க ‘இஹ்ஸாஉ’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘மனனம் செய்து கொளல்’ என்று இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் விளக்கம் தந்துள்ளார்கள்.தன்னுடைய திருப்பெயர்களில் தொண்ணுõற்றொன்பதை திருக்குர்ஆனில் வெளிப்படுத்திய இறைவன், மீதமுள்ள ஒன்றை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டு , அதனைத் தான் விரும்புகின்றவர்களுக்கு மட்டுமே உணர்வின் மூலம் வெளிப்படுத்துகின்றான். அந்த ஒன்றே ‘இஸ்முல் அஃலம்’ (மாண்பார்ந்த திருப்பெயர்) என்று கூறப்படுகிறது.இஸ்முல் அஃலத்தைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் பொழுது, “அதைக்கொண்டு ஒருவன் இறைவனிடம் இறைஞ்சினால் அவனுடைய இறைஞ்சுதல் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்,” என்றார்.‘‘இதைக் கற்றுக்கொண்ட ஒருவர் எவர் மீதும் சிறு புன்மொழியைக் கூட வீசி எறியக்கூடாது. அவ்வாறு செய்தால் தமக்கு தாமே அழிவையும் இழிவையும் தேடிக்கொள்வார்,” என்று அப்துல் வஹ்ஹாப் ஷஃரானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !