உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி மாதம் 12 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெறும்.

நேற்று காலை 7:45 மணிக்கு உற்ஸவ சவுமியநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் திருமண மண்டபம் எழுந்தருளினார். காலை 10:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருடன், கொடிப்பட்டம் திருவீதி வலம் வந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன.பின்னர் பள்ளியறைக்கு பெருமாள் எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது, தொடர்ந்து பெருமாளுக்கும், தேவியருக்கும் காப்புக்கட்டி பிரமோத்ஸவம் துவங்கியது. அடுத்து, தங்கப்பல்லக்கில் பெருமாள் தேவியருடன் திருவீதி புறப்பாடு நடந்தது. தினசரி இரவில் வாகனங்களில் பெருமாள் புறப்பாடும், ஏப்.,16ல் சூரணாபிஷேகம், ஏப்.19ல் தேரோட்டம், ஏப்.20 ல் காலையில் பிரணயகலகம், மாலையில் புஷ்பயாகம் வாசித்தல்,, ஏப்.,21ல் புஷ்பப் பல்லக்கும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !