திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கொடியேற்றம்
ADDED :2673 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று(ஏப்.,11ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடைபெறும். தை பிரம்மோற்சவத்திற்கு பின், சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம் இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.