ராம நவமி விரதம் எப்படி மேற்கொள்வது?
ADDED :2574 days ago
காலையில் வீட்டு வாசலில், பூஜையறையில் கோலமிட வேண்டும். ராமர் படத்தை சுத்தம் செய்து, அதில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். துளசி மாலையை அணிவித்து விளக்கேற்ற வேண்டும். அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் (அ) ’ராம ராம ராம’ என்று சொல்லி அர்ச்சனை செய்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயை வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். வாய்ப்பு இருந்தால் சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர் மோர், பஞ்சாமிர்தத்தை படைக்கலாம். விரதமிருப்போர் ராம நாமம் ஜபிக்கலாம் (அ) ராமாயணம் படிக்கலாம். 1008 முறை ’ஸ்ரீராம ஜெயம்’ எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு அவசியம்.
முடிந்தளவு பானகம், நீர்மோர், விசிறி தானம் செய்யலாம்.