உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி துவக்கம்

பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி துவக்கம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.நேற்று முன்தினம் (ஏப்., 13ல்) மதியம், 12:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

விழாவையொட்டி மாங்குழி, பசுமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி ஆதிவாசிகள், பாலமலை ரங்கநாதர், பூதேவி, ஸ்ரீதேவி தாயார் உற்சவர்களுடன் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.நேற்று (ஏப்., 13ல்)உற்சவர் அன்னவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, அனுமந்தவாகனம், கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இம்மாதம் 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம், 21ல் சேஷ வாகன உற்சவமும், 22ல் சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !