திருமங்கலத்தில் காட்டு மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :2405 days ago
திருமங்கலம்:திருமங்கலத்தில் காட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக்கோயிலில் மூன்று நாட்களாக
நடந்த விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
சுற்றியுள்ள கிராம பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று (ஏப்., 15ல்) நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். விருதுநகர், உசிலம்பட்டி, ராஜாஜி ரோடு வழியாக கோயிலுக்கு அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நீர் ஆகாரம், எண்ணெய் வழங்கினர். மஞ்சள்
நீர் ஊற்றியும் வழிபட்டனர்.