உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் கோ பூஜை
ADDED :2408 days ago
உடுமலை : உடுமலை, நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், இன்று (ஏப்., 17ல்) , கோ பூஜை மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி யுடன் நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, இன்று (ஏப்., 17ல்), காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மாரியம்மன் கோவில் திருமஞ்சன பூஜை நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு, முளைப்பாரி எடுத்தல் மற்றும் கொடியேற்றம் நடக்கிறது.
மாலையில் லலிதா சகஸ்ர நாமபாராயணம் மற்றும் மாலை, 6:00 மணிக்கு கும்பஸ்தாபிதம் செய்யப்படுகிறது. கோவில் வளாகத்தில் இரவு, 8:00 மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்., 18ல்), மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.