ஈரோடு சித்திரை மாத பிரதோஷ விழா: சிவாலயத்தில் பக்தர்கள் தரிசனம்
ADDED :2409 days ago
ஈரோடு: சித்திரை மாதத்தின், முதல் பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நேற்று
(ஏப்., 17ல்) மாலை கோலாகலமாக நடந்தது.
விழா மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நந்தீஸ்வர பெருமானுக்கு, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை, திருமஞ்சனப்பொடி, பன்னீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வஸ்திர அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் உமாமகேஸ்வரர், கோவில் உள் பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷ விழா என்பதால், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.