குன்னூரில் மகாவீரர் ஜெயந்தி விழா
ADDED :2409 days ago
குன்னூர்: குன்னூரில் மகாவீரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. குன்னூர் ஜெயின் சமூகத் தினர் சார்பில், நேற்று 17ல், காலை, 11:15 மணிக்கு மவுண்ட் ரோட்டில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியாக பாலகிலவா பகுதியில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தது. அங்கு ஆரத்தி , சிறப்பு பஜனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. மகிளா மண்டல குழுவினரின் சொற் பொழிவு, பாடல்கள் இடம் பெற்றன.
தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான போட்டிகள் நடந்தன. முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இலவச மோர் வழங்கப்பட்டன. ஏராளமான ஜெயின் மக்கள் பங்கேற்றனர்.