உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் திருவிழா துவக்கம்

கோத்தகிரி மாரியம்மன் திருவிழா துவக்கம்

கோத்தகிரி:கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு கணபதி வேள்வி பூஜை
நடந்தது. காலை, 9:00 மணிக்கு, காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது. திருவிழா, அடுத்த மாதம், 7ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு அலங்கார அபிஷேகம் வழிபாடு
நிகழ்ச்சியும், பகல், 1:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !