உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊர்மாரியம்மன் கோவில் திருவிழா

ஊர்மாரியம்மன் கோவில் திருவிழா

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி கடைவீதியில் உள்ள, ஊர்மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு, முதல் நாளில் மாரியம்மனுக்கு கங்கை பூஜைகள், 1,008 குடம் நன்னீர் அபிஷேகம் நடந்தது. இரண்டாம் நாளில், அம்பாளுக்கு மஹா  அபிஷேகங்கள், மஹா தீபாராதனை நடந்தன. இதையடுத்து, சிம்மவாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா வந்தது. இதில், பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !