விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2409 days ago
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அச்சுத ஆஞ்சநேயர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு அச்சுத ஆஞ்சநேயருக்கும் , சீதாராமர், லட்சுமணருக்கு பால் தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.மாலை 6 மணிக்கு ஸ்ரீ சீதா தேவிக்கும், ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மணமகள், மணமகன் வீட்டு சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் ஐதீக முறைப்படி சீதாதேவிக்கும் ராமசந்திரமூர்த்திக்கும் திருமணம் நடந்தது.அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை பெரும்பாக்கம் ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.