உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை:உடுமலை போடிபட்டி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழா, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடந்தது.உடுமலை அருகே போடிபட்டியிலுள்ள, பாலதண்டாயுதபாணி கோவிலில், திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி துவங்கியது.நான்கு கால வேள்விகளும், சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டன. நேற்றுமுன்தினம் (ஏப்., 21ல்), விமான கலசம், யந்திரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

நேற்று (ஏப்., 22ல்), காலை, 9:15 மணிக்கு, கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து, 9:30 மணிக்கு மேல், பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது.காலை 11:00 மணிக்கு மேல், மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்., 23ல்), காலை 11:00 மணிக்கு மண்டலாபிஷேக பூஜை துவங்குகிறது. கோவிலில், 48 நாட்களுக்கு, நாள்தோறும், காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !