உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் அய்யப்ப சுவாமி கோவிலில் குருபூஜை

மந்தாரக்குப்பம் அய்யப்ப சுவாமி கோவிலில் குருபூஜை

மந்தாரக்குப்பம்:வடக்குவெள்ளுர் அய்யப்ப சுவாமி கோவிலில் 40 வது ஆண்டு குருபூஜை மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது.வடக்குவெள்ளுர் ஜயப்பன் கோவிலில் ஐய்யப்ப சுவாமி ஆசிரமத்தில் 40 வது ஆண்டு குரு பூஜை விழா மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஐய்யப்ப சுவாமிக்கு பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அய்யப்ப பஜனை பாடி வழிப்பட்டனர். ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !