கடலூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் பட்டாபிஷேகம்
ADDED :2484 days ago
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 13ம் தேதி, துவங்கியது. தினமும், காலை திருப்பாவை சாற்றுமுறை, திருமஞ்சனம், மாலை வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் (ஏப்., 23ல்) இரவு சீதா, லட்சுமண, ஆஞ்சநேயர் சமேத கோதண்ட ராமருக்கு சிறப்பு பட்டாபிஷேகம் நடந்தது.பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.