ஈரோடு பெரிய மாரியம்மன் உண்டியல்களில் ரூ.12.86 லட்சம் காணிக்கை
ADDED :2400 days ago
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் உண்டியலில், 12.86 லட்சம் ரூபாய், 90 கிராம் தங்கம், காணிக்கையாக கிடைத்தது.
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, சமீபத்தில் நடந்தது. விழாவில் பக்தர்கள் காணிக்கை செலுத்த, ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) உண்டியல்கள் திறந்து, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 12 லட்சத்து, 86 ஆயிரத்து, 52 ரூபாய், 90 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி, பொருட்கள் காணிக்கையாக கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.