உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

குளித்தலை அம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

குளித்தலை: முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவிலில், மூல மந்திர சண்டி ஹோமம் நடந்தது.

குளித்தலை அடுத்த, முத்து பூபால சமுத்திரத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த, 24ல் கணபதி பூஜையுடன், சண்டி ஹோமம் துவங்கியது. நேற்று முன்தினம் (ஏப்.,25ல்), ஆவரண அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. நேற்று (ஏப்., 26ல்) காலை, கோவில் முன் மண்டபத்தில், கோ பூஜை, சண்டி பூஜை செய்து, சண்டி யாகம் நடந்தது. இதில், பக்தர்கள் வழங்கிய பழம், தானியங்கள், திரவியங்கள் ஹோம குண்டத்தில் போட்டு பூஜை
செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !