உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை

* காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்.மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும்.
* முடிந்தளவு பிறருக்கு உதவுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்.அன்றாடம் தூங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும்.     
* தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும்.   
* ஒரு தொண்டனைப் போல ஆன்மிகத்தில் ஈடுபடுபவன் சேவை தவிர மற்றதை சிந்திக்க மாட்டான்.            
* பக்தி என்னும் பண்பு இல்லாவிட்டால் மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போவான்.             
* தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பவன் எல்லா மேன்மையும் அடைவான்.            
* படிப்பு, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.
* ஓடும் நதி இறுதியில் கடலைச் சேரும். மண்ணில் பிறந்த உயிர்கள் கடவுளைச் சென்றடையும்.
* உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி விடும்.            
* கர்வத்தால் சொல்லும், செயலும்  முரண்படும். அடக்கத்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.      
* உலகம் என்னும் சத்திரத்திற்கு கடவுளே உரிமையாளர். யாரும் இதை சொந்தமாக்க முடியாது.
* சத்திரத்தில் சில நாள் தங்கும் பயணி போல, மனிதனுக்கு உலக வாழ்வு சில காலம் மட்டுமே. - விளக்கம் தருகிறார் சாந்தானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !