உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீற்றின் பெயர்கள்

திருநீற்றின் பெயர்கள்

திருநீறு - பசுமம், விபூதி, பசிதம், சாரம், ரட்சை என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதாக திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளியுள்ளார்.

திருநீறு: ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதால்
திருநீறு - பசுமம்.

விபூதி: வி - மேலான,
பூதி - ஐஸ்வரியம். மேலான ஐஸ்வரியத்தை அளிப்பதால், விபூதி, இங்கு மேலான ஐஸ்வரியம் என்பது முக்திப்பேறு.
பசிதம்: அறியாமை
அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால், பசிதம் எனப்படும்.
சாரம்: ஆன்மாக்களின் மன மாசுகளை நீக்குவதால், சாரம் என்றழைக்கப்படுகிறது.
ரட்சை: ஆன்மாக்களைத் துன்பத்திலிருந்து ரட்சிப்பதால், ரட்சை எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !