சுதபஸ் முனிவருக்கு விமோசனம்
ADDED :2402 days ago
சுதபஸ் என்ற முனைவர், நூபுர கங்கைத் தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை நோக்கிக் தவம்புரிந்தார். அப்போது துர்வாச மகரிஷி தன் பரிவாரங்களுடன் அங்குவந்தார். அவரின் வருகையை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. தன்னை அவர் அலட்சியம் செய்வதாக எண்ணிய துர்வாசர் கோபமுற்று ‘மாண்டூகோ பவ ’ என்று சாபமிட்டார். உடனே தவளையாகிப் போனார் சுதபஸ். தன் பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தரவேண்டிய சுதபஸ் முனிவரிடம், “விவேகவதி தீர்த்தக் கரையில் (வைகை) தவமியற்று. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து விமோசனம் தருவார்” என்றார். அதன்படி சுதபஸ் முனிவருக்கு விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.