பழநியில் வருண ஜபம்
ADDED :2372 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வருகிற மே 8ல் மழைவேண்டி வருண ஜபம் நடைபெற உள்ளது.
இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து முக்கியமான கோயில்களிலும் மழைவேண்டி யாகம் நடத்தும்படி துறை ஆணையர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
பழநியில் கிழக்கு ரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் வருகிற மே 8 ல் மழைவேண்டி சிறப்பு யாகபூஜை, வருண ஜபம் வழிபாடு நடைபெற உள்ளது. நந்தியை சுற்றி தொட்டிக்கட்டி
நீர்நிரப்பியும், சிவாச்சாரியர்கள் தண்ணீர் தொட்டியில் அமர்ந்தும் தேவார மழைப்பதிகம் பாடுவர், என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.