வடமதுரை சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை ஆண்டு விழா
                              ADDED :2372 days ago 
                            
                          
                           வடமதுரை: சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை குழுவின் ஆண்டு விழா நடந்தது.
பாலமுருகன் கோயிலில் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள், கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்த குடங்களை கொண்டு வந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் வழிபாடுகளும், வேப்பிலை கஞ்சி, வழங்குதல், அன்னதானம் நடந்தது.
அலங்கார மின்ரதத்தில் அம்மன் வீதியுலா, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே குழுவாக சமயபுரத்திற்கு புறப்பட்டு சென்றனர். மே 6ல் 
சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர். ஏற்பாட்டினை குழு தலைவர் கிருஷ்ணன், துணைதலைவர் எம்.சி. மணி செயலாளர் வீரமணி, துணைச் செயலாளர் கண்ணன், 
பொருளாளர் தங்கப்பாண்டி, கமிட்டி உறுப்பினர் செய்திருந்தனர்.