அக்னி நட்சத்திரம் துவக்கம்: அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம்
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரத்தையொட்டி, அருணாசலேஸ்வரருக்கு, வரும், 29 வரை தாராபிஷேகம் நடத்த ‘தாரா பாத்திரம்’ பொருத்தப்பட்டது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, அருணாசலேஸ்வரரின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, இன்று முதல் வரும், 29 வரை, தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட, ‘தாரா பாத்திர’த்தில் வெட்டிவேர், சந்தனம், ஜவ்வாது, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, துளி துளியாய், அருணாசலேஸ்வரரின் திருமேனியில் விழுந்து, அபிஷேகம் செய்விக்கும் வகையில் பொருத்தப்பட்டது. அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. இதே போன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், ‘தாரா பாத்திரம்’ பொருத்தப்பட்டது.