திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா
ADDED :4931 days ago
ஆனைமலை :ஆனைமலையில் 400 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக, நேற்று முன்தினம் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன்ஆபரணம் பூணுதல் ஊர்வலமும், இரவு 1.00 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும், நேற்று மாலை 4.00 மணிக்கு பெரிய திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடந்தன. இன்று காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை மதியம் 1.00 மணிக்கு திருத்தேர் நிலைசுநிறுத்தலும், மாலை 3.30 மணிக்கு ஊஞ்சல், பட்டாபிஷேகமும், 11ம் தேதி காலை 11.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 7.00 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.