சித்திரை கிருத்திகை விழா: திருப்போரூரில் விமரிசை
ADDED :2353 days ago
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அதிக பக்தர்கள் கூடும் கிருத்திகைகளில் ஒன்றாக, சித்திரை கிருத்திகை விழா விளங்குகிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் கந்தசுவாமியை வழிபட வந்தனர். அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள், பிரார்த்தனையாக மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.மாலை, கந்தசுவாமிக்கு, கிருத்திகை அபிஷேகமும், மயில் வாகன விதீயுலாவும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.