காஞ்சிபுரத்தில் சீதா கல்யாண உற்சவம்
ADDED :2353 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சீதா கல்யாண மகா உற்சவம் நேற்று நடைபெற்றது.காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவில் அருகில் தனியார் மண்டபத்தில், 27வது ஆண்டு சீதா கல்யாண உற்வசம், வியாழக்கிழமை துவங்கியது.முதல் நாள் கணபதி ஹோமத்துடன் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, உற்சருத்தி பஜனை நடந்தது. அதை தொடர்ந்து, சீதா கல்யாண உற்சவம் துவங்கியது.மதியம், 1:00 மணியவில், திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதிவுலாவும் இரவு, 7;00 மணிக்கு, ஆஞ்சநயே உற்சவம் நடைபெற்றது.