பூமாயி அம்மன் கோயில் தெப்பம் வசந்தப்பெருவிழா நிறைவு
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தெப்ப உற்ஸவத்துடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் பூச்சொரி தல் விழா முடிந்து ஏப்.,24ல் கொடியேற்றம் நடந்து காப்புக்கட்டி வசந்தப்பெருவிழா துவங்கியது.
தினசரி இரவு அம்பாள் கோயில் திருக்குளத்தைச் சுற்றி பவனி வந்தார். ஏப்.,30 ல் பால்குடம், மே3 ல் அம்மன் ரத ஊர்வலம் நடந்தது. பத்தாம் நாளில்(மே 4) காலை 9:30 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது, மாலை 4:00 மணிக்கு கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி கோயில் திருக்குளத்தை வலம் வந்தார். பெண்கள் கோயில் குளத்தைச் சுற்றிலும் தீபம் ஏற்றினர். பின்னர் அம்மன் கோயில் எழுந்தருளி மூலவருக்கு சந்தனக்காப்பு களைந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழு தலைவர் நா.ஆறு.தங்கவேலு தலைமையில் செய்தனர்.