ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா
ADDED :2347 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா, மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.
இதனை முன்னிட்டு மே 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. தினமும் காலையில் பல்லக்கு சேவையும், இரவில் வீதி புறப்பாடும் நடக்கிறது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. மே 15ல் இரவு 7:15 திருக்கல்யாணமும், மே 17ல் காலை 8:15 மணிக்கு தேரோட்டமும், மே 18ல் வைகாசி விசாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.