அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :2343 days ago
அலங்காநல்லூர்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சித்திரை மாத கார்த்திகைவிழா நடந்தது.
சஷ்டிமண்டப வளாகத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
முன்னதாக மூலவர் சுவாமிக்கும், வித்தகவிநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.