உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசித் தூண்கள்!

ராசித் தூண்கள்!

கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாதேவி திருக்கோயில். இங்கே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயில் பகுதிகளில் சிற்பக்கலையின் சிறப்பைக் காணலாம். கர்ப்பக்கிரகத்தின் முன் 12 ராசிகளுக்கும் உரிய அதிபதிகளின் திருவுருவங்கள் தாங்கிய 12 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. அந்தந்த ராசிக்கு உரிய மாதத்தில், அந்தந்த ராசிக்கான தூணில் மட்டும் சூரிய வெளிச்சம் விழுமாறு இதை அமைத்திருப்பது விசேஷம். இந்த மண்டபம் விதானத்தில் உள்ள வட்டமும், அதிலுள்ள நான்கு பறவைகளும் சிற்ப அழகு! அம்பிகை சாரதாவைத் தரிசிக்க சிருங்கேரிக்குச் செல்லும் பக்தர்கள், கோயிலின் இதுபோன்ற சிற்பச் சிறப்புகளையும் அவசியம் ரசித்து வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !