சக்தி அவதாரங்கள்!
ADDED :2394 days ago
சிவனாரிடம் உமையவளாகவும், நாராயணரிடம் லட்சுமிதேவியாகவும், பிரம்மனிடம் சரஸ்வதியாகவும் திகழ்கிறது ஆதிசக்தியின் அம்சம். அதுபோன்று சந்திரனிடத்தில் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமதேவனிடம் ரதிதேவியாகவும், அக்னியிடத்து சுவாஹாதேவியாகவும், யமனிடத்தில் சுசீலா நிருதியாகவும், மநுவிடம் சதரூபையாகவும் வசிஷ்டரிடம் அருந்ததியாகவும், கச்யபரிடம் அதீதியாகவும், அகத்தியரிடம் லோபாமுத்திரையாகவும், கவுதமரிடம் அகல்யையாகவும் திகழ்கிறது சக்தியின் அம்சம். அவளே குபேரனிடம் செல்வமாகவும், கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என புண்ணிய நதிகளாகவும் திகழ்கிறாள். எனவே, பல திருநாமங்களில் திகழும் சக்தியை வணங்கிட, சகல தேவர்களின் அருளும் முனிவர்களின் ஆசியும் பெற்றுச் சிறக்கலாம்.