உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோற்சவம் - 2019

ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோற்சவம் - 2019

சென்னை:ஆதி சங்கரர் ஜெயந்தி விழா, சென்னை, துரைப்பாக்கம், சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளியில், இன்று (மே., 9ல்) கொண்டாடப்படுகிறது.

பாத யாத்திரையாக பயணித்து, மக்கள் மத்தியில், சனாதன தர்ம முறையிலான வாழ்க்கை நெறி தழைத்தோங்கவும், பக்தி நெறி பரவவும், பல காரியங்களை செய்து, வெற்றி கண்டவர், ஆதி சங்கரர்.அவரின் அவதார தினம், ஆண்டுதோறும், வைசாக சுக்ல பஞ்சமி அன்று, ஆதி சங்கரர் ஜெயந்தி என, கொண்டாடப்படுகிறது.

காஞ்சி காமகோடி பீடம், மடம் சமஸ்தானம், ஆதி சங்கரர் ஜெயந்தியை, ஆண்டுதோறும், வேத பாராயணம், விசேஷ பூஜை, உபன்யாசம், சங்கர விக்ரஹ வீதி ஊர்வலம் என கொண்டாடு கிறது. தற்போது, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சென்னை யில், யாத்திரை மேற்கொண்டுள்ளார்.அவர் முகாம் அமைந்திருக்கும் இடமான, துரைப்பாக்கம், சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளியில், இன்று (மே., 9ல்) , ஆதி சங்கரர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

காலை, சந்திரமவுளீஸ்வரபூஜை முடிந்து, சங்கரருக்கு பூஜை நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு, மடத்து முகாம் அருகில், 1.50 கி.மீ., தூரம் உள்ள கங்கையம்மன் கோவிலில் இருந்து, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பின், வேத கோஷத்துடன், அங்கிருந்து ஊர்வல மாக, ஆசார்யாளின் விக்ரஹம், ஊர்வலமாக மடம் முகாமில் வந்து சேரும்.காலை, மடம் முகாமில், சமஷ்டி காயத்ரி ஜெபம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம், 3:00 மணிக்கு, வேதாத்யயனம் செய்து முடித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !