அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :2456 days ago
அன்னூர்: அன்னூரில் இன்று மழை வேண்டி யாகம் நடக்கிறது.தமிழகத்தில் மழை இல்லாமல், கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, மழை பெய்வதற்காக சிறப்பு வழிபாடு மற்றும் யாகங்களை, தேர்வு செய்யப்பட்ட கோவில்களில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியது. அதன்படி கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் கடந்த, 6ம்
தேதியும், மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில், 7ம் தேதி நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று (மே., 9ல்) காலை 8:00 மணிக்கு மழை வேண்டி யாகம், சிறப்பு கீர்த்தனை வாசித்தல், சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கின்றனர்.