பழநி கோயிலில் மலேசிய அமைச்சர்
ADDED :5040 days ago
பழநி : பழநி மலைக்கோயிலில், மலேசியா மனித வளத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அவர் கூறுகையில், ""இந்தியா-மலேசியா இடையில் நல்லுறவு உள்ளது. கடந்த ஆண்டுகளை விட, தற்போது அதிக வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் பாஸ்போர்ட், விசா, பெர்மிட் இல்லாமல் சிறையில் உள்ளனர். அவர்களை விசாரித்து இந்தியா அனுப்புகிறோம். சிலரிடம் இந்தியர் என்பதற்கான ஆதாரம் கூட இல்லை. இவர்களை விடுதலை செய்வதில் சிரமம் உள்ளது, என்றார்.