திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி துவக்கம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று (மே., 9ல்) தொடங்கியது.உற்ஸவர் சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டப மைய மேடையின் கீழ் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினர்.
விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 18 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர்.அன்று சுவாமிக்கு பகல் 2:00 மணிவரை தொடர்ந்து குடம் குடமாக பக்தர்கள் கொண்டு வரும் பால் அபிஷேகம் செய்யப்படும்.மே 19 காலை சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர்.