திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கொடியேற்றம்
ADDED :2680 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா நடந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே., 8ல்)அனுக்ஞை வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. நேற்று (மே., 9ல்) காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 17 ந் தேதி மாலை தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும். விழா நாட்களில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன்
பூதம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திரவிமானம், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா நடக்கவுள்ளது.