செந்துறையில் சூசையப்பர் ஆலய திருவிழா
ADDED :2680 days ago
செந்துறை:செந்துறையில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. கடந்த மே 5 அன்று சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மறுநாள் காலை திருவிருந்து திருப்பலி, செபஸ்தியார் பொங்கல் வைத்து வேண்டுதல், தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மே 7 காலை பொதுப்பொங்கல், ஆடம்பர திருப்பலி, இரவு அன்பின் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் (மே., 8ல்) புனிதர் களின் தேர்பவனி, குருத்துவ அருட்பொழிவு மற்றும் கொடியிறக்கம் நடந்தது. தேர்பவனியின் போது உப்பு, மிளகு, பொரி ஆகியவற்றை சூறையிட்டு வழிபட்டனர். நேற்று (மே., 9ல்) காலை நன்றி திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.