உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பால்குட திருவிழா

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பால்குட திருவிழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நாளை (மே 18) நடக்கிறது.இக்கோயிலில் மே 9 வைகாசி விசாக வசந்த உற்ஸவ திருவிழா துவங்கியது. தினமும் சுவாமி, தெய்வானை புஷ்ப அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக பால்குட உற்ஸவம் நாளை
(மே 18) நடக்கிறது. காலை 7:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் ஆறுமுகம் கொண்ட சண்முகம், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்படும். விழா ஏற்பாடுகளை இந்து
அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !