உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கானுாரில் மழை வேண்டி வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் வைத்து வேண்டுதல்

கானுாரில் மழை வேண்டி வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் வைத்து வேண்டுதல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கானுாரில் மழை வேண்டி கிராம மக்கள் வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் வைத்து வர்ண ெஜபம் செய்தனர். தமிழகம்முழுவதும் மழையின்றி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய மழை இல்லாததால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருகிறது. மழை வேண்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

திருப்புவனம் கானுாரில் சிவகாமி உடனாய பிரளயவிடங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள நந்திகேஸ்வரரை சுற்றிலும் 3 அடி உயரத்திற்கு களிமண் சுவர் எழுப்பி அதில் வீட்டிற்கு ஒருகுடம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி நந்திகேஸ்வரரை தண்ணீரில் மூழ்க வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.  பூஜையை காமேஸ்வரபட்டர் வகையறா நடத்தி வைத்தார். மாலை நான்கு மணிக்கு தொடங்கிய பூஜை இரவு ஏழு மணி வரை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !