உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடியில் வைகாசி வசந்த உற்ஸவ விழா

ஏர்வாடியில் வைகாசி வசந்த உற்ஸவ விழா

கீழக்கரை : ஏர்வாடி முத்தரையர் நகரில் உள்ள மச்சவதார சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3வது ஆண்டு வைகாசி வசந்த உற்ஸவ விழாகடந்த மே 8ல் (புதன்கிழமை) காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. கல்யாண விநாயகர், பூ மாரியம்மன், திருநீற்று சித்தர், பஞ்சலிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இன்று(மே 18) காலை 10:00 மணிக்கு ஏர்வாடி நகரில் பால்குடம், காவடிகள், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் எடுத்து வீதியுலா வந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பகலில் அன்னதானம், மாலையில் உலக நன்மைக்கான திருவிளக்கு பூஜையும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பரத்மாஸ்ரீ ராமநாதன் சுவாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !