பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா
ADDED :2339 days ago
பெரியகுளம்: பெரியகுளத்தில் போலீசார் காவல் தெய்வமாக வழிபடும் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.
கரகம், பொங்கல் வைத்தல், ஆடு, கோழி, சேவல் படைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியகுளம் பகுதியில் புதிதாக பணிக்கு சேரும், பணிமாற்றலாகி வரும் போலீசார் முதல் உயரதிகாரிகள் வரை இக்கோயிலில் தரிசிப்பர் என்பது சிறப்பு. நாளை (மே 21) மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை பூஜாரி முருகன், மகன்கள் செய்துள்ளனர்.