ஆர்.எஸ்.மங்கலம் கருப்பணசுவாமி பூக்குழி விழா
ADDED :2668 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆறுமுககோட்டை கருப்பண சுவாமி கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.