உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதமாக சாப்பிடுங்கள்

மிதமாக சாப்பிடுங்கள்

மதீனாவில் இருந்த நபிகள் நாயகத்திற்கும், அவரது தோழர்களுக்கும் உதவும் எண்ணத்துடன் மருத்துவர் ஒருவரை அனுப்பினார் எகிப்து மன்னர் முகவ்கிஸ். பல நாள் ஆகியும் ஒருவரும் சிகிச்சை பெற வரவில்லை. அந்நிய மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் யாரும் தன்னிடம் மருத்துவம் பார்க்கவில்லையோ என மருத்துவர் வருந்தினார். ஒருநாள் அவரைச் சந்தித்த நாயகம், ”நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்புங்கள்;  ஏனெனில் குர்ஆனில் அறிவுறுத்தியபடி, பசித்த பின்பே நாங்கள் சாப்பிடுகிறோம். அதுவும் மிதமாகவே. எனவே நோய்கள் எங்களை அண்டுவதில்லை” என்றார்.

இனிய பேச்சால் மருத்துவரின் மனவருத்தம் தீர்ந்தது. மருத்துவரைப் புறக்கணிக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமல்ல; நோயே இல்லாத ஊருக்கு எதற்கு மருத்துவர் என நாசூக்காக தெரிவித்தார் நாயகம்.  அத்துடன் நோய்களுக்கு மூலகாரணம்  அவரவர் உணவுப்பழக்கமே என்பதையும் உணர்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !