இந்த வாரம் என்ன
* மே 18, வைகாசி 4: வைகாசி விசாகம், பவுர்ணமி விரதம், நம்மாழ்வார் திருநட்சத்திரம், அர்த்தநாரீஸ்வரர் விரதம், திருப்பரங்குன்றம் முருகன் பால்குடக் காட்சி, திருமோகூர் காளமேகப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவர், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி, பழனி முருகன் தேர், திருப்புத்தூர் திருத்தளிநாதர் தெப்பம்.
* மே 19, வைகாசி 5: மதுரை கூடலழகர் தேர், காட்டுபரூர் ஆதிகேசவர் தெப்பம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி சூர்ணோற்ஸவம், திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்பக விமானம்.
* மே 20, வைகாசி 6: திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விடையாற்று உற்ஸவம், அரியக்குடி சீனிவாசர் வெள்ளி ரதம், தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாணம், காரைக்குடி கொப்புடைய நாயகி வெள்ளிக் குதிரையில் பவனி, அகோபில மடம் 35வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
* மே 21, வைகாசி 7: திருஞானசம்பந்தர், திருநீலக்கர், திருநீலகண்டர், முருகநாயனார், குமரகுருபர சுவாமிகள் குருபூஜை, மதுரை கூடலழகர் தசாவதாரக் காட்சி, தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளி ரதம், காரைக்குடி கொப்புடைய நாயகி தேர், பழனி முருகன் மயில் வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் புறப்பாடு, கரிநாள்.
* மே 22, வைகாசி 8: சங்கடஹர சதுர்த்தி விரதம், மதுரை கூடலழகர் கருட வாகனம், காரைக்குடி கொப்புடைய நாயகி யானை வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் வேணு கான கண்ணன் திருக்கோலம், அரியக்குடி சீனிவாசர் காலையில் ஆடும் பல்லக்கு, இரவு பூப்பல்லக்கு, தருமபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனம்.
* மே 23, வைகாசி 9: முகூர்த்தநாள், காரைக்குடி கொப்புடைய நாயகி தெப்பம், இரவு புஷ்ப பல்லக்கு, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விடையாற்று உற்ஸவம், காஞ்சிபுரம் வரதராஜர் உபய நாச்சியார்களுடன் தேர் பவனி, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* மே 24, வைகாசி 10: திருவோண விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, இரவு மாட வீதி புறப்பாடு, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புறப்பாடு, தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காஞ்சிபுரம் வரதராஜர் குதிரை வாகனம்.