உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவரிடம் மன்றாடுங்கள்

ஆண்டவரிடம் மன்றாடுங்கள்

மூர்அவுஷ் என்ற நடிகர் பன்றியை வைத்து வித்தை காட்டி  வந்தார். தலைகீழாகக் கிடக்கும் எழுத்துக்களை சரியாக எடுத்து வந்து, ’நான் ஒரு நல்ல பன்றி’ என்று காண்பிக்கும் அந்த பன்றி. பின்னங்கால்களை மட்டும் ஊன்றி நடந்து சிறுவர்களை சிரிக்க வைக்கும். கண்ணாடியை மூக்கில் மாட்டிக் கொண்டு, புத்தகம் படிப்பது போல ’போஸ்’ கொடுக்கும். தன்னை  சம்பாதிக்க வைத்த பன்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக சோப்பு போட்டு குளிப்பாட்டி, பவுடர், சில்க் டிரஸ் எல்லாம் போட்டு கண் போல பாதுகாத்து வந்தார் நடிகர்.

ஒருநாள் தெருவழியே பன்றியுடன் சென்ற போது, அது நடிகரின் கையை விட்டு ஓடியது. திறந்து கிடந்த சாக்கடைக்குள் வேகமாக இறங்கி, ஆனந்தமாக குளிக்கத் தொடங்கியது. என்ன தான் பொத்திப் பொத்தி வளர்த்தாலும், பன்றி தன் இயற்கை குணத்தை காட்டியதைக் கண்ட மூர்அவுஷ்,  வித்தை காட்டும் தொழிலைக் கைவிட்டார்.

மனிதனும் இப்படித் தான். நல்ல குணங்களுடன் இருப்பது போல நடிக்கிறான். ஆனால் பல நேரங்களில் குரூரபுத்தி தலைதூக்கி தீமைகளைச் செய்கிறான். எவ்வளவு படித்தாலும், நாகரீகமாக இருந்தாலும்,  ஒவ்வொரு மனிதனிடமும் ஜென்ம புத்தி தலை விரித்தாடுகிறது.  கெட்டதை செய்தபின் வருந்திப் பயனில்லை. அதை அடியோடு மாற்றும் சக்தி ஆண்டவருக்கு மட்டுமே உண்டு. நல்ல புத்தியை பெற அவரிடம் மன்றாடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !