உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதை எல்லாம் நம்பாதே!

கண்டதை எல்லாம் நம்பாதே!

* கேள்விப்பட்டதை எல்லாம் கண்மூடித் தனமாக நம்பாதே; தீர விசாரித்து உண்மை அறிந்துகொள்.      
* சட்டத்தால் மட்டும் யாரையும் திருத்த முடியாது. மனமாற்றம் ஒன்றே அமைதிக்கான வழி.       
* மனத்தூய்மை இருந்தால் துன்பம் உண்டாகாது. நீ படும் துன்பத்திற்காகப் பிறர் மீது பழி சுமத்தாதே.       
*  ஊக்கமும், அறிவும் உள்ளவனாக இரு. உழைப்பில் உறுதி கொள்; குறிக்கோளை நோக்கி முன்னேறு.      

* முட்டாளுடன் உறவாடுவதைக் காட்டிலும் தனிமை சிறந்தது.

*  வளர்ச்சியும், தாழ்ச்சியும் ஒருவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தது.       

*   பொய் பேசாதே. வதந்தியைப் பரப்பாதே. உண்மையின் வழியில் நடந்திடு.      
*  யாரையும் புறம் பேசாதே. பேச்சைக் குறை; செயலில் ஈடுபடு.
*  அறிவு மட்டுமே அரிய பொக்கிஷம். அழகு, செல்வம் நிலையற்றவை.       
*  அறிவாளி  தன்னைத் தானே  புகழ்ந்து  கொள்வதுமில்லை. பணிவுடன் நடக்க மறப்பதுமில்லை.
*  ரகசியம் காப்பவனே நல்ல நண்பன். நல்ல நட்பே வாழ்வு முழுதும் கைகொடுக்கும்.      
*  பேராசை பெரும் வியாதி. இதை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் பெறுவான்.      
*  நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒருவன் உலகில் இருக்க முடியாது.      
*  தனக்குரியதை பலாத்காரத்தினால் சாதிப்பவன் நீதிமான் அல்ல. - எச்சரிக்கிறார் புத்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !