உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சித்தால் ஐஸ்வர்யம்

அர்ச்சித்தால் ஐஸ்வர்யம்

வியாபாரத்தில் லாபம், நஷ்டம் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் சிலருக்கு மட்டும் லாபமாக தொழில் அமைகிறது.  பலருக்கு நஷ்டத்தால் மனவருத்தம் உண்டாவதோடு  கடன் தொல்லைக்கும் ஆளாகின்றனர். இதில் இருந்து மீள எளிய பரிகாரங்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து செய்ய லாபம் படிப்படியாக உயரும். லட்சுமி குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான். அவருக்குரிய திங்கட்கிழமை (அ) பிரதோஷத்தன்று விரதமிருந்து வில்வ அர்ச்சனை செய்தால் லாபம், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் செய்வது  சிறப்பு. லட்சுமியின் அம்சமாகத் திகழும் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தாலும் லாபத்தோடு, முன்னோர் ஆசியும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !